Wednesday, October 19, 2011

மாதிரி வினாக்கள்

1) 1. இலக்கப் பிரிப்பு (Digital Divide) என்பதனால் யாது விளங்கிக் கொள்கிறீர்?


2. இலக்கப் பிரிப்பு என்பதனை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான நடவடிக்கைகளை உமது சொந்க மொழிநடையில் எழுதுக?




2)


1. இலக்கப் பிரிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணம் என்ன?


2. இலக்கப் பிரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கூடிய நடவடிக்கைகள் என நீர் கருதுவனவற்றை விளக்குக.




3) இலங்கையின் கிராமப்புறங்களிற்கு தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதற்கு தடையாக உள்ள காரணிகள் 5 இனை கலங்துரையாடுக.




4) தகவல்தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அனுகூலங்களை கிராமப்புற மக்கள் பயன்படுத்த முடியாமைக்கான காரணங்கள் 5 இனை இனங்காண்க.?




5)


1) ஒருவர் வழமையாக நீண்டநேரம் கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படத்தக்க சுகாதாரப் பிரச்சினைகள் இரண்டினை விளக்குக.


2) தரவு மறைகுறியாக்கம் (Data encryption) என்பதால் கருதப்படுவது யாது என விளக்குக.


3) பாடசாலைப் பிள்ளைகளின் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பவியல் அறிவை மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூன்று தொடக்க முயற்சிகளை விளக்குக.




6)


1) கல்வித்துறையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பயன்படும் மூன்று சந்தர்ப்பங்களைக் குறிப்பிட்டு அவற்றைச் சுருக்கமாக விளக்குக.


2) தகவல் தொழிநுட்பவியலைப் பயன்படுத்திப் பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்கும் இரு அரசாங்க நிறுவனங்களை எழுதுக


3) தகவல் தொழிநுட்வியல் துறையில் மூன்று தொழில் வாய்ப்புக்களைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றினதும் பணி விபரங்களைச் சுருக்கமாக விபரிக்க.


4) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலின் பயன்பாட்டினால் உருவாக்கப்படும் மூன்று விவாதவிடயங்களைக் (issues) குறிப்பிடுக.




7)


1) தகவல், தொடர்பாடல் தொழிநுட்பவியல் (ict) துறையில் உள்ள மூன்று தொழில் வாய்ப்புகளை இனங்கண்டு, அவை ஒவ்வொன்றினதும் கொள்பணிகளை (job task) சுருக்கமாக விபரிக்க.


2) ict துறையில் உள்ள இரு ஒழுங்காற்றியல் விவாதவிடயங்களை (Ethical issuess) சுருக்கமாக விளக்குக. உமது விடையில் குறிப்பிட்ட ஒழுங்காற்றியல் விவாதவிடயம் ஒவ்வொன்றுக்கும் ஒர் உதாரணம் இடம்பெற வேண்டும்.


3) பிழையான நிலைப்பாடுடன் (Posture) கணினிகளைப் பயன்படுத்துவதனால் ஏற்படத்தக்க இரு உடல் நல விளைவுகளைச் சுருக்கமாக விளக்குக.


4) முறைவழியாக்கியின் கதி (Processor Speed), நினைவகக் கொள்திறன் (Memory Capacity) போன்ற கணினி விபரக்கூற்றுகள், தனியாள் கணினியைத் தெரிந்தெடுப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாகும். வீட்டுத்தேவைக்காக ஒருதனியாள் கணினியை வாங்கும் போது நீர் கருத்தில்கொள்ளும் இருவேறு காரணிகளைச் சுருக்கமாக விபரிக்குக.


5) பின்வரும் துறைகளில் எவையேனும் இரண்டின் ஒவ்வொரு ict பிரயோகத்தை விளக்குக.




(i) கல்வி (ii) சுகாதாரம் (iii) வியாபாரம்




8)


உமது பெற்றோர் உமக்காக ஒரு புதிய மேசைக்கணினியை (Desktop Computer) வாங்கியுள்ளதாக கற்பனை செய்க. பெற்றோர் உமது கணினிக்கு இணையத் தொடுப்பை ஏற்பாடு செய்யவுள்ளனர்.




1. உமது கணினியை இணையத்துடன் தொடுக்கும்போது நீர் எதிர்நோக்கத்தக்க இருசாத்தியமான அச்சுறுத்தல்களைச் சுருக்கமாக விபரிக்குக


2. அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து கணினியைப் பாதுகாக்கும் இருமுறைகளை விபரிக்குக.


3. இக்கணினியைப் பயன்படுத்தும்போது எழத்தக்க சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு நீர் கருத்தில் கொள்ளும் மூன்று காரணிகளை சுருக்கமாக விளக்குக.


உமது நண்பர் தனது பயன்பாட்டிற்காக கொள்வனவு செய்த கணினி விளையாட்டு மென்பொருளின் ஒருபிரதியை உம்மிடம் வழங்கியுள்ளார் என கற்பனை செய்க. உமது புதிய கணினியில் இம்மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தல் உகந்தது என நீர் கருதுகிறீரா? உமது விடைக்கான காரணங்களை விளக்குக.




9)


1) தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பவியலிலிருந்து (ict) சுகாதாரத்துறை எங்ஙனம் நன்மையைப் பெற்றுள்ளது என்பதை இரு உதாரணப் பிரயோகங்களைப் பயன்படுத்தி விளக்குக.


2) கற்றல் - கற்பித்தல் செயல்முறையில் ict ஐ எங்ஙனம் பயன்படுத்தலாமென விவரிக்க. உமது விடையில் கல்விப் பிரயோகங்களின் இரு உதாரணங்கள் இடம்பெற வேண்டும்.


3) இலங்கையில் ict ஐ பயன்படுத்தி விவசாயத்தை எங்ஙனம் மேம்படுத்தலாம் என்பதை விளக்குக. மூன்று உதாரணங்கள் தருக.


4) இணையத்தின் நன்மையைப் பெறுவதில் இலங்கை மக்கள் எதிர்நோக்கத்தக்க மூன்று தடைகளை விளக்குக.




10)


கணினிப் பயனர் ஒருவரால் ஒழுங்கின்றி வைக்கப்பட்டுள்ள வேலைச் சூழலொன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதனை அவதானித்து கீழே வினவப்பட்ட வினாக்களுக்கு விடை தருக.


1. இப்பயனரின் சுகாதாரத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க மூன்று காரணிகளை எழுதுக.


2. இப்பயனரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தத்தக்க பாதகமான மூன்று காரணிகளை எழுதுக


3. நீங்கள் இனங்கண்ட சுகாதாரத்திற்கு பாதகமான மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமைகளைத் தவிற்பதற்காக எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.




11) பின்வருவனவற்றுள் மூன்று தலைப்புகள் பற்றிச் சுருக்க விபரங்களை எழுதுக.


1. க,பொ.த உயர்தரத்தில் ஒருபாடமாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT) உள்ளடக்கப் பட்டுள்ளமை


2. பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தைப் பயிலுகையில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அறைகூவல்களும்.


3. இலங்கையில் உல்லாசப்பயணத்துறை மேம்பாட்டிற்காக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல்


4. மோட்டார் வாகன பதிவுச்சான்றிதழ் வழங்கும் செயன்முறையைக் கணினி மயப்படுத்துவதனால் கிடைக்கும் பிரதிபலன்கள்.




12) தொழிநுட்ப அபிவிருத்திகாரணமாக வர்த்தக உலகு தொடர்ந்தும் வளம் பெற்று வருகின்றது. நவீன, முன்னணித் தொழிநுட்பங்களுள் ஒன்றாகிய இணையத் தொழிநுட்பத்தினுடாகச் செயற்படும் உலகளாவிய வலையமைப்பைப் (World wide web) பயன்படுத்தி சவால்கள் மிக்க உலகை இலகுவாக வெற்றி கொள்ளக் கூடிய விதம் பற்றி வர்த்தக சமூகம் அறிவூட்டம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் போன்றல்லாது இன்று உலகெங்கும் பரந்து காணப்படும் சேவை பெறுநர்களுக்கு சேவை வழங்குவதற்காகச் சில்லறை வியாபாரத் தளங்கள் கூட இன்று வலைக்கட்டமைப்பினை (Web Site) நடத்தி வருகின்றன. e-mark என்பது மேலே விபரிக்கப்பட்ட நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தனது வர்த்தகத்தைப் பிரபல்யப்படுத்த எதிர்பார்க்கும் ஒரு சில்லறை வியாபாரத் தளமாகும்.


1. வலைக் கடப்பிடம் ஒன்றை நடத்தி வருவதால் e-mark வணிக முயற்சி பெறத்தக்க இரண்டு பிரதிபலன்களைத் தருக.


2. அவர்களது வலைக்கடப்பிடம் மூலம் வாடிக்கையாளருக்கு வழங்கக் கூடிய தகவல்களைக் குறிப்பிடுக.


3. மேற்படி வலைக் கடப்பிடத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்வதற்காக அதில் சேர்க்கக் கூடிய இரண்டு சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.


4. பொது மக்களுக்கு e-mark தொடர்பாக அறிவூட்டம் செய்வதற்காகக் கையாளக்கூடிய இரண்டு உத்திகளைத் தருக.




13) பின்வருவன மூன்று பற்றிச் சுருக்கக் குறிப்பு எழுதுக


1. இலங்கையில் இளம் சந்ததியினர் மீது தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் செல்வாக்கு.


2. கணினி விளையாட்டுகளின் பிரதிகூலங்கள்


3. செல்லிடத் தொலைபேசிப் (Cellphone) பாவனையினால் ஏற்படக் கூடிய சுகாதாரம் பிரச்சினைகள்


4. இலங்கையில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை பயன் படுத்துதல்.




14)


1) e-srilanka வேலைத்திட்டத்தின் நோக்கங்களைத் தருக.


2) வங்கித்துறையில் பயன்படும் தகவல் தொழிநுட்ப சாதனங்களை பட்டியலிடுக.


3) வங்கித்துறையில் தகவல் தொழிநுட்பத்தின் பயன்பாட்டை விளக்குக.




15)


1) 'கல்வித்துறையில் தகவல் தொழிநுட்பம்' என்பதுபற்றி உமது சொந்த மொழிநடையில் சிறுகுறிப்பு எழுதுக.?


2) 'கற்றல் முகாமைத்துவ முறைமை' (Learning Managmemet System) என்பதனை விளக்குக.




16. பின்வருவனவற்றிற்கு சிறுகுறிப்பு எழுதுக.


1. தீமை பயக்கும் கணினி மென்பொருட்கள்


2. கிராமிய பொருளாதாரத்தை கட்டிஎழுப்புவதில் ICT இன் பங்களிப்பு


3. கணினி பயனர் ஒழுக்கம் (Computer Ethics)


4. மென் பொருள் திருடப்படல்


5. வைத்தியத்துறையும்; தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமும்




17. பின்வரும் தலைப்புகளுக்கு சிறு குறிப்பு எழுதுக.


1. கற்கும் சாதனம் என்ற வகையில் ஒரு கணினியின் பயன்பாடு;


2. தொடர்ச்சியான கணினிப்பாவனையால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்


3. இணையத்தில் துஷ்பிரயோகம்.




18. பின்வரும் தலைப்புகளுக்கு சிறு குறிப்பு எழுதுக.


1. கற்கைகளுக்கு தனியாள் கணினியை பயன்படுத்தல்


2. பாரம்பரிய அஞ்சலுக்கு மேலாக மின்னஞ்சலின் அனுகூலம்


3. இணையத்தின் பிரதிகூலங்கள்


4. ICT யைப் பயன்படுத்தி இலங்கை ஊழியர் படையின் திறனை மேம்படுத்துதல்.

வேலைத்தளத்தை பொருத்தமானவாறு அமைத்துக்கொள்ளல்

பூரணமான உலகத்தில் நன்கு ஒளியூட்டப்பட்ட அறையில் உங்கள் மிகவும் சௌகரியமானதும் ஆதாரம் மிக்கதுமான கதிரையில் அமர்ந்து பெரிய திரையுள்ள கணினியில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். உண்மையில் நீங்கள் ஒருவரிடமிருந்து உங்களுக்குக் கையளிக்கப்பட்ட உங்களுக்குரியதைவிட ஆறு அங்குலங்கள் உயரமான அல்லது குறுகிய ஒரு அலுவலகக் கதிரையிலிருந்து கொண்டு தெளிவற்ற சிறிய கணினித் திரையை சரிவாகப் பார்த்துக்கொண்டே பணிபுரிய வேண்டியிருக்கிறது. கதிரை, மேசை, மவுஸ், மொனிட்டர் மற்றும் வெளிச்சம் ஆகிய-16-அநேகமான ஆரோக்கியமான வேலைத்தலத்திற்குரிய அத்தியாவசியப் பொருட்கள் வேண்டுமெனத் தெரிந்து தரப்பட்டபொழுது அவைகளை மேலும் பயனாளிகளுக்கு உதவும் வகையில் செய்வதற்கு முடியுமென்பது தெளிவு. அதற்கான வெளிப்பாடுகளாவன:


 மொனிட்டரிலிருந்து உங்கள் தலை 18 முதல் 30 அங்குலங்கள் தள்ளி இருக்க வேண்டும்.

 சாவிப் பலiகையை முழங்கையின் உயரத்தில் உங்கள் கரங்களை நேரே வைத்து செயற்படும் வகையிலான தூரத்திலும் கோணத்திலும் வைத்திருக்க வேண்டும்.

 கதிரைக்குக் கைகள் இல்லாவிட்டால் உங்கள் கைகளுக்கு ஆதாரமளிக்கும் வகையில் தலையணையை உபயோகிக்க.

 உங்கள் பாதங்கள் மட்டமாக நிலத்தில் வைத்திருக்கும் வகையிலும் இடுப்பு முழங்கால் மட்டத்திற்குச் சற்று உயரத்தில் இருக்கும் வகையிலும் கதிரையைச் சரிப்படுத்துக.



ஒரு குறிப்பிட்ட வயதை அணுகிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஒரு விசேட அறிவிப்பொன்று உள்ளது. சில வகை மூக்குக்கண்ணாடிகள் அணிந்தவர்கள் அவற்றின் கீழ்ப்பக்கக் கண்ணாடிகளுக் கூடாகப் பார்த்து வாசிபபதற்கேதுவாக அடிக்கடி தலையைப் பின்பக்கமாகச் சாய்ப்பது வழக்கம். இது கழுத்து, தோள் மற்றும் முதுகு என்பவற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வியாதிக்கட்டுப்பாட்டு மையங்கள், உங்கள் மொனிட்டரைத் தாழ்த்தி வைத்து விசேடமாக கணினி வேலைக்கென வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்துமாறு சிபரிசு செய்கின்றது.


கணினி வேலைக்கான முறையாக இருக்கும் நுட்பங்கள்


 உங்கள் பாதங்களை நிலத்தில் மட்டமாக வைத்திருக்க.

 கூன்விழுந்து உட்காராது நிமிர்ந்து உட்காருக.

 தலையை நடுநிலைத்தானத்தில் வைத்திருக்க.


நல்ல குருதியோட்ட நிலையை நிலைப்படுத்திக்கொள்ள அடிக்கடி உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு பிரதேசத்தை மற்றும் களைப்படையச் செய்வதைத் தவிர்க்க. வேலைசெய்யும் பொழுது புத்தகங்களையோ அச்சிட்ட ஆவணங்களையோ பார்க்கவேண்டி ஏற்படின் அவற்றைப் பார்ப்பதற்கு சுழன்று திரும்புவதற்குப் பதிலாக அவற்றை உங்களுக்கு அண்மையில் முன்னால் வைத்துக்கொள்க. நீங்கள் வேலை செய்யும்போது உங்கள் தோளுக்கும் தாடைக்குமிடையில் தொலைபேசியை வைத்துக்கொண்டு கதைப்பீரா? இதனால் எந்த நன்மையும் வரப்போவதில்லை. நீங்கள் உரையாடிக் கொண்டு வேலை செய்ய வேண்டுமானால் ஒலிபெருக்கியுடனான தொலைபேசியை அல்லது பாரங்குறைந்த தலையிலணியும் நுண்ஒலிபெருக்கிச் சாதனத்தை வாங்கி உபயோகிக்க.


இயக்குபவரின் பயிற்சிகள்


நீங்கள் பரிபூரணமான மனித இயக்கவியல் ஒழுங்குபாடுகளையும் இருக்கும் விதத்தையும் கடைப்பிடித்த பொழுதிலும் நீங்கள் அடிக்கடி வேலையை இடைநிறுத்தம் செய்ய வேண்டியுள்ளது. 'செய்ததையே செய்யும் நிலையான வேலை' அதாவது கணினியை உபயோகிப்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் களைப்பைத் தரவல்லது. (பௌதிகரீதியான செயற்பாடுகளிலிருந்து பெறும் களைப்புப் போன்ற 'நல்ல களைப்பு' அல்ல இது) கணினியை நிறுத்தாமலே உங்கள் பணிக்குச் சற்று இடைநிறுத்தம் தரலாம். நாளின் கடைசி மணித்துளி வரைக்கும் எல்லாக் கோவைப் படுத்தலையும் விட்டு வைப்பதற்குப் பதிலாக 15 நிமிடத்துண்டு இடைவேளைகளுடன் பணிபுரிவது நன்று. தொலைபேசி அழைப்புகள் எடுக்கும் விடயத்திலும் இது போன்றே செயற்படுக. சில நிபுணர்கள் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் மூன்று நிமிட பணி இடை நிறுத்தம்தேவையென்று சிபாரிசு சய்கின்றனர். அத்தோடு கூட இந்த நலமிக்க உலகத்தில் உள்ள எங்களைப் போன்றவர்கள் ஒரு நாளைக்கு பல தடவைகள் இடைநிறுத்தம் செய்ய வேண்டுமென்று சிபாரிசு செய்கிறார்கள். இருதயத்தைப் போன்ற பெரிய தசைகளை இழுத்து மற்றும் பயன்படுத்த இது உதவும். ஐந்து நிமிட நடையானது உங்களை ஆரோக்கியமானவராகவும் சுறுசுறுப்பானவராகவும் ஆக்கும். உங்களது வேலையில் புத்துணர்ச்சியோடு ஈடுபட ஆயத்தமாவதற்கு இது உதவும்.


கணினி வேலையில் அடிக்கடி முதன்மையாகத்தாக்குதலுக்குள்ளாகும் உடம்பின் பாகங்களாவன: கண்கள், முதுகு மற்றும் கைகளாகும். சில அவசர ஆலோசனைகளாவன:


 உங்கள் கண்கள் உலர்ந்து விடாதபடி அடிக்கடி கண் சிமிட்டுக.

 ஒவ்வொரு முறையும் மொனிட்டர் திரையைச் சுத்தமாக்குக. அதனால் திரையில் படியும் தூசுப் படலத்திற்கூடாக நீங்கள் உற்றுப்பார்க்கும் நிலை ஏற்படாது. இந்தத் தூசுப் படலம் திரையில் ஏற்படும் நிலை மின்னின் விநோதமான சக்தியினால் அங்கு ஏற்படுகின்றது.

 ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் கண்களைக் கணினிக்கு வெளியே குறைந்தது 10 அடிகளுக்கப்பால் உள்ள பொருட்களைக் குறித்துக் குவித்து நோக்குக.

 நேராக அமர்ந்து கொண்டே உங்கள் தோளின் பின்புறத்தைப் பார்ப்பதனால் கழுத்து விகாரத்தைத் தளர்த்துக.

 தோள்களை பின்பக்கமாகவும் முன்பக்கமாகவும் உருட்டுவதன் மூலம் அவற்றைத் தளர்வுறச் செய்க.

 கைவிரல்களை அகலமாக விரிப்பதன் மூலமாக உங்கள் கைகளிலுள்ள தசை இழுவையைக் குறைக்குக.

 கைமுஷ்டியை இறுக்கியபடி பிடித்துக்கொள்க.

ICT இல் இயல்பாயமைந்த சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள்

கணினியொன்றை உபயோகிப்பது உங்கள் விரல்கள், கைகள், மணிக்கட்டுகள், கரங்கள்,தோள்கள், கழுத்து, முதுகு மற்றும் கண்கள் போன்ற உங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கக்கூடும். பார்வைக்குக் கணினிகள் போதுமான பாதுகாப்புடையன போன்று தெரிந்தாலும் சில ஆபத்து;கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது. அவற்றை இயலுமானவரை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். கணினியில் பணி புரியும்போது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில ஆலோசனைகள் பற்றி வாசிக்க.

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள்

கணினிப் பழக்க வழக்கங்கள் சுகாதாரத்த்தின் மீது தாக்கம் செலுத்தும் தொடர்ச்சியாக நீண்டநேரம் கணினிகளை உபயோகிப்பது உங்கள் உடலில் சில கோளாறுகளை உண்டுபண்ணும். அவற்றுள் சில:


 கண்வலி

 முதுகுவலி

 சௌகரியக் குறைவு

 மூளையில் கட்டிகள்


போன்றன.


Firewall

ஒரு firewall என்பது அதிகாரபூர்வமற்ற பாவனைகள் உங்கள் கணினிக்குள் செல்ல வழி வகுப்பதைத் தடுக்கும் ஒரு தொகுதியாகும். ஒரு firewall வன்பொருளாகவோ அல்லது மென்பொருளாகவோ இருக்க முடியும். வன்பொருள் firewalls வெளியுலகத்திலிருந்து வருகின்ற அநேக உருவில் உள்ள தாக்குதல்களுக்கும் வலிமைமிகுந்த பாதுகாப்பை வழங்கவல்லதாகும். இதனை ஒரு தனித்து நிற்கும் ஆக்கப் பொருளாக அல்லது அகலப்பட்டை வழிகாட்டியாகப் பெற்றுக் கொள்ளலாம். துரதிஷ்டவசமாக வைரசுகளுடன் கிருமிகளுடன் மற்றும் Trojan உடன் போரிடும்பொழுது ஒரு வன்பொருள் firewall ஆனது மென்பொருள் firewall ஐ விட திறன் குறைந்ததாகவே இருக்கிறது. வெளிச்செல்லும் ஈ தபால்களில் அது பதியப்பட்ட கிருமிகளைப் பெரும்பாலும் கவனிக்காமல் விடுவதுடன் இது ஒழுங்கான வலைவேலைப் பயணமாகவே காண்கிறது. தனித்தனியான வீட்டுப் பாவனையாளர்களுக்கு மிகப் பிரபல்யமான firewall தெரிவானது ஒரு மென்பொருள் firewall ஆகும். ஒரு சிறந்த மென்பொருள் firewall ஆனது உங்கள் கணினியைக் கட்டுப்படுத்துவதற்காக வெளித்தாக்க முயற்சிகளிலிருந்து பாதுகாக்கிறது.

வைரஸ் இற்கு எதிரான மென்பொருள்

1987 இலிருந்து பாதுகாப்புத்திணைக்களத்தாலும் பல பல்கலைக்கழகங்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய வலைவேலையான ARPANET I ஒரு வைரஸ் பாதித்தபோது பல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் கிடைக்கக்கூடியதாயிருந்தன. இவ்வித நிகழ்ச்சிநிரல்கள் மிகவும் அறியப்பட்ட வகை வைரஸ்களுக்காக உங்கள் கணினித் தொகுதியைக் காலாகாலத்தில் பரீட்சிக்கின்றன. வைரஸ் இற்கு எதிரான மென்பொருள் அநேகமாக அறியப்பட்ட எல்லா வகை வைரசுகளையும் கண்டுபிடிக்கக்கூடியனவாக உள்ளன. ஆனால் அவற்றின் திறனைப் பராமரித்து வைத்திருப்பதற்கு ஒழுங்காக அவற்றைக் காலத்திற்கொத்த புதுநிலைக்குக் கொண்டு வர வேண்டும். வைரஸ் நிபுணர்கள் சுமார் 40,000 இற்கு மேற்பட்ட வைரஸ்களையும் அவற்றின் மாற்றம் பெற்ற வகைகளையும் சில கடந்த வருடங்களாக பதிவு செய்து வைத்துள்ளனர்.

வைரஸ்கள் எவ்வாறு வேலை செய்கின்றன ?

பாதிக்கப்பட்ட கோப்பினை அல்லது பிரயோகத்தை நீங்கள் திறக்கும் அதே வேளை கேடுதரும் நோக்கம் கொண்ட இரகசியக் குறியீடுகள் தாமாகவே பிரதியாக்கம் செய்து உங்கள் தொகுதியில் ஒரு கோப்பினை ஆக்கும். அங்கு அது தனது செயற்பாட்டிற்காகக் காத்திருந்து அதை நிரலாக்கம் செய்தவரின் தீர்மானத்திற்கேற்ப உங்கள் தொகுதியில் செயற்படும். ஒரு இணைப்பினைத் திறந்த பின் email எளிமையாக அழித்துவிடுவதனால் வைரஸ் இனைத் தவிர்த்துவிட இயலாது. ஏனெனில் அது ஏற்கனவே பொறியினுள் புகுந்துவிட்டிருப்பதனால் என்க. வைரஸ் எழுதியவர் முன்பே ஒழுங்குபடுத்திய எதிர்கால நேரம் அல்லது நாளில் உடனடியாக அது செயலுருப்பெற்று தனது சுமையைச் செலுத்தலாம். அல்லது நீங்கள் சேமிக்கும்போது அல்லது ஒரு கோப்பினைத் திறக்கும்போது உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டளையை நிறைவேற்றும் போது இவ்வாறு செய்யலாம். மைக்கல் அஞ்சலோ வைரஸ் ஆனது உதாரணத்திற்கு அதைச் சித்தரித்தவரின் பிறந்த தினமான எந்த வருடத்திலும் வரும் மார்ச் 6ஆம் திகதியன்று அதன் சுமையைச் செலுத்துமாறு நிகழ்ச்சிநிரற்படுத்தப்பட்டிருந்தது.

தீய நோக்க்கமுள்ள இரகசியக்குறியீடுகள்

இலத்திரனியல் கெடுபொருளான கிருமிகள், மற்றும் Trojan horse, பிரயோகங்கள் ஆகியன வைரஸ்களாகும் என்ற பொதுவான ஒரு தவறான எண்ணம் உள்ளது. அவைகள் அப்படியல்ல. கிருமிகள், Trojan horse மற்றும் வைரஸ்கள் என்பன ஒரு அகன்ற பிரிவுப் பகுப்பாய்வாளரால் 'தீயநோக்கமுள்ள இரகசியக் குறியீடுகள்' எனக் கூறப்படுகின்றன. உதாரணம்:


 வைரஸ்

 வர்மிஸ்

 றொஜன் ஹோர்ஸ்


வைரஸ் உங்களுக்குத் தெரியாமலும் உங்களது விருப்பங்களுக்கு எதிராகவும் உங்கள் கணினியில் ஏற்றப்பட்டுச் செயற்படும் ஒரு நிகழ்ச்சிநிரல் அல்லது இரகசியக் குறியீட்டின் ஒரு பகுதியே இதுவாகும். ஏனைய நிகழ்ச்சிநிரல் போன்றே இதுவும் கணினி என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்களைக் கொண்டுள்ளது.


 வைரஸ்கள் தாமாகவே பல்கிப் பெருகக்கூடியன.

 எல்லா கணினி வைரஸ்களும் மனிதராலேயே ஆக்கப்பட்டன.

 ஒரு எளிய வைரஸ் மீண்டும் மீண்டும் பிரதியாக்கம்செய்து இலகுவாக உருவாகத்தக்கது.

Tuesday, October 18, 2011

பாதுகாப்புப் பிரச்சினைகள்

பௌதிக ரீதியான பாதுகாப்பு

 உங்களது கணினியானது தூசு அற்ற, உலர்ந்த (ஈரமற்ற), புகையற்ற சூழலில் வைத்திருக்கப்பட வேண்டும் - சூழல் காரணிவன்பொருள் பாதுகாப்பு

 உங்களது கணினியானது ஒரு UPS (குறுக்கீடற்ற வலு வழங்கி) உடன் இணைக்கப்படுவதால் திடீர் வலுத்தடை மற்றும் வலு ஏறியிறங்கும் இடர்களிலிருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.

 மின்னல் மற்றும் இடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அலையெழுச்சி (Surge) பாதுகாப்புச் சாதனத்துடன் தொடுக்கப்பட வேண்டும்.

 வோற்றளவைக் கட்டுப்படுத்த நிலைப்படுத்தி (Stabilisher) ஒன்றுடன் தொடுக்கப்பட வேண்டும்.

தர்க்கரீதியான பாதுகாப்பு

 மென்பொருளும் மற்றும் மரபுகளும் உங்கள் கணினியில் கடவுச்சொல், பின்னுயர்த்தி (Backup) கள் என்பவற்றின் உபயோகத்தினால் பாதுகாக்கப்பட முடியும்.

கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடு

நவீன தொழில்நுட்பத்துடனான கற்றல் அனுபவத்தால் மாணவருக்கு வளமூட்டக்கூடிய ICT கற்கைநெறியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது. தொழில்நுட்ப வளம் மிகுந்த வேலைவாய்ப்புக்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் புதிய தொழில்வாய்ப்புக்கள் நிறையத் தோன்றியுள்ளன. அவைகளில் சில:


1. தரவு உட்புகுத்தும் இயக்குநர்

2. கணினி இயக்குநர்

3. நிகழ்ச்சி நிரலாளர்

4. மென்பொருள் அபிவிருத்தியாளர்

5. மென்பொருள் தர உறுதிப்படுத்தும் பொறியியலாளர்

6. தொகுப்பு பகுப்பாய்வாளர்

7. மென்பொருள் பொறியியலாளர்

8. வன்பொருள் பொறியியலாளர்

9. வலைவேலை நிர்வாகி

10. IT முகாமையாளர்

11. வலை அபிவிருத்தியாளர்

12. Desktop விளம்பரதார்

13. கணினிப் பிரயோகங்கள் உதவியாளர்


ICT துறையின் முன்னேற்றமானது பாரம்பரியத் தொழில்சார் நிபுணர்களுக்கு ஒரு சவாலாக வந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம். அவர்கள் தங்களைத் தொழிலில் அவர்களது சொந்த திறன்மட்டத்தில் நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் பிந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் அவர்கள் தாங்களாகவே மாறிக் கொள்ள வேண்டும்.

எண்ணகப் பிரிப்புக்கு முலாமிடல்

எண்ணகப் பிரிப்புக்கு முலாமிடல் சமூகத்திற்கு இப்பிரச்ச்சினை பற்;றிய விழிப்புணர்வை எழுப்;புதல் ஒன்று சேர்தல் எங்களுக்கு நல்லது. ஒரு கூட்டான முயற்சி எண்ணகப் பிரிப்புக்குப் பாலங்கட்ட அவசியமானது. அறிவினால் வலுவூட்டப்பெறுக. அதனால் நீங்கள் கல்வி பெற முடியும். அத்துடன் அந்த இடைவெளியைப் பாலமிட உங்களுக்கு ஒப்பானவர்களை அணி திரட்டலாம்.

Digital Devide

எண்ணகப்பிரிப்பு (சமூகவியல் விலக்கல்) - Digital Devide எண்ணகப் பிரிவு என்பது ICT மூலவளங்களுக்கான அடையும் வாய்ப்பின் படியான மக்களின் பிரிப்பு ஆகும். ICT மூலவளங்களை இலகுவாக அடையக் கூடியவர்களுக்கும் அவ்வாறு அடைய முடியாதவர்களுக்குமான இடைவெளி ஒன்றுள்ளது. சமூகம்சார் பொருளாதார வேறுபாடுகளிலிருந்தான விளைவுகளை எண்ணகப்பிரிப்பு தருகின்றது. சமூகங்களுக்கிடையேயான வேறுபாடுகள் பிரதானமாக எண்ணகத் தகவல்களை (Digital Data) அவர்கள் அடையும் வாய்ப்பைப் பாதிக்கும். எண்ணகப்பிரிப்பானது ஒரு சமூகத்தை இரண்டு குழுக்களாகப் பிரிக்கும் ஒரு தெளிவான தனித்த இடைவெளியன்று. மீளாராய்ச்சியாளர்களின் அறிக்கையின்படி பிரதிகூலங்களானவை குறைந்த செயற்பாட்டுக் கணினிகள், குறைந்த தரமான அல்லது உயர்ந்த விலையுள்ள இணைப்புகள் (குறுகிய பட்டை அல்லது தொலைபேசி முகப்பு இணைப்புக்கள்), தொழில்நுட்ப உதவி பெறுவதிலுள்ள கஷ்டம், நிதி வழங்கும் அடிப்படையிலான உள்ளடக்கத்திற்கு வரும் வாய்ப்புக் குறைவு என்பவற்றின் வடிவங்களை எடுக்கிறது. எளிமையாகக் கூறப்போனால் எண்ணகப் பிரிப்பு என்பது கணினிகள், இணையம் அத்துடன் வேறு எண்ணக சாதனங்கள் உட்பட தகவல் தொழில்நுட்பத்திற்குரிய வாய்ப்பில் உள்ள சமமின்மையையே குறிக்கும்.

Hacking

சவாரி செய்தல் - Hacking (அதிகாரமற்ற வழிவகை) சவாரி செய்தல் என்பதன் கருத்தாவது வேறு ஒருவரின் கம்பியூட்டர் தொகுதிக்குள் சட்டத்திற்கு முரணாக நுழைந்து பயன்பெறல் என்பதாகும். பலர் இவ்வாறான ஒன்றினை ஒரு சட்டத்திற்கு முரணான நடவடிக்கையாய் அன்றி ஒரு சவாலான நடவடிக்கையாகவே நோக்குகின்றனர்.

ICT இன் பயன்பாடுகளின் பிரச்சினைகள்

திருட்டு என்பது என்ன?


திருட்டு என்பது நிகழ்ச்சிநிரல்களைச் சட்டத்திற்கு மாறாகப் பிரதியெடுத்தல், மோசடி செய்தல் மற்றும் மென்பொருளைப் பகிர்தல். அத்துடன் ஒரு நண்பருடனாவது நிகழ்ச்சி நிரலொன்றைப் பகிர்தல் என வரையறுக்கப்படும். மற்றொரு வகையில் திருட்டு என்பது ஒரு உரிமம் எதுவுமின்றி மென்பொருளை உருவாக்கல், பகிர்தல் அல்லது பயன்படுத்தல் எனவும் கூறலாம். கணினிக் திருட்டானது எண்ணக உருவமைப்புடைய ஏதாவதொன்றை உள்ளடக்கியிருக்கும். அதாவது ஏதாவது மென்பொருள், வீடியோ, விளையாட்டு, எண்ணக செவிப்புலச் சாதனம் அல்லது ஈ-புத்தகம் போன்றன.


மென்பொருள் திருட்டு எனப்படுவது என்ன?


கணினி மென்பொருளானது USA இன் கூட்டரசு பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ்ப் பாதுகாக்கப்படுகின்றது. அது கூறுவதாவது பதிப்புரிமை வைத்திருப்பவரின் அனுமதியின்றி ஆவணக்களரிப் பின்னுயர்த்தலை (Archival back-up) ஐத் தவிர வேறு ஏதாவது காரணத்திற்காகவும் பயனாளிகள் ஒரு மென்பொருள் பாகத்தைப் பிரதி செய்யக்கூடாது. கணினி நிகழ்ச்சிநிரலின் அதிகாரமற்ற மீள் உற்பத்தியானது திருட்டு என்றே கருதப்படும். கணினித் திருட்டானது பதியப்பட்ட ஊடகங்களான வீடியோ நாடாக்கள் மற்றும் சுருக்கமாக்கிய தட்டுக்கள் (இறுவட்டுக்கள் - - compact discs) போன்றவற்றிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் பிரதியாக்கத்தின் தரம் இங்கு குறைந்துபோவதில்லை. இறுதிப்பயனாளியை வலுவூட்டி ஒரு உற்பத்தித் துணையாளராய் உருவாக்கும் தொழிற்றுறையானது கணினித் தொழிற்றுறை மட்டுமேயாகும். கணினிப் பாவனையாளரின் கைகளில் நம்பிக்கையும் பொறுப்புணர்ச்சியும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு கணினி நிகழ்ச்சிநிரல் மீண்டும் மீண்டும் பிரதியாக்கம் செய்யப்பட்டாலும் ஆரம்ப நிரல் போனறே செயற்படும். பல வருடங்கள் எடுத்து விருத்தி செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலை ஒரு சில செக்கன்களில் பிரதியாக்கம் செய்துவிட முடியும்.


மென்பொருள் விருத்தியாக்குவது செலவு அதிகமுள்ளதாக இருப்பினும் அநேகமாக எல்லா தனி நபர் கணினியை உபயோகித்து ஒரு விலை மலிவான பிரதியை உருவாக்கிக் கொள்ள முடியும். தனிநபர் கணினிகளின் பாவனை பல பயனாளிகளைத் திருடர்களாக ஆக்கிவிட்டன எனக் கூறமுடியும். தமது வன்தட்டுக்களில் உள்ள எல்லா மென்பொருள்களும் அவர்களால் வாங்கப்பட்டன என்று நேர்மையாக எத்தனை பேரால் கூற முடியும்? பதிப்புரிமை வடிவமைப்புக்கள் மற்றும் தனி உரிமைகள் சட்டம் 1989 இலிருந்து நீங்கள் காண முடிவது என்னவெனில் மென்பொருளைக் களவாடுவது அல்லது பிரதியாக்கம் செய்வது குற்றவாளிக்கான ஒரு குற்றமாகும். எவ்வாறெனினும் பல வேறுவேறு பிரயோகங்களுக்கு என பல இலவசமான திறந்தவள மென்பொருட்கள் (Open softwares) கிடைக்கின்றன.

Monday, October 17, 2011

Job Net

வலைவேலை இலங்கையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சினால் உருவாக்கப்பட்ட இலங்கைக்கான வலையமைப்பே இது. நீங்கள் http://www.jobsnet.lk என்னும் வலைப்பக்கத்தில் சென்று இதனைக்காணலாம். இந்த வலைப்பக்கத்தில் தகவல்கள் சிங்களத்தில் அல்லது தமிழ்மொழியில் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

Online shopping

Online shopping ஆனது மிகவும் பிரபல்யமான பயன்களை உடைய ஒன்றாகும் எனக்கூறப்படுகின்றது. நாங்கள் விரும்பினால் Online shopping இல் பல்வேறு இடைக்கால வேலைகளைப் பயனாளிகள் செய்ய முடியும். உதாரணமாக Online களஞ்சியம் உள்ள பெரியசுப்பர் மாக்கற்களில் அநேகமானவையில் உணவுக்காகச் சந்தை செல்லல் மிகவும் எளிமையானதாகும். இனிமேலும் சந்தைப்பகுதியானது பயணம் செய்துதான் அடையப்படுவது என்பது இல்லை. ஒரு கோரிக்கை வைக்கப்பட்டவுடன் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய நேரத்திற்குள் ஒரு வானில் கோரியதைக் (order) கொண்டுவரப்பட்டுத் தரப்படும். வேறு விசேடமான கடைகள் சேதன உணவையும், நேரடி பண்ணை உற்பத்திகளையும் வழங்குதல் இயலும்.

பயணமும் சூழலும்

வர்த்தகம் சம்பந்தமான பயணத்தின் தேவையை வீடியோ மகாநாடு (Vedio Conferencing) மற்றும் ஈ-தபால் என்பன குறைத்துள்ளன. இது மக்களை எங்காவது விமானநிலையத்தில் சிக்கிக் கொண்டிருப்பதைவிட தங்களது குடும்பங்களுடன் வீட்டில் அதிகநேரம் இருக்க வசதி செய்திருக்கிறது. குறைவான பயணம் குறைவான மாசுபடுத்தலாகும். ஏனைனில் குறைந்தளவு கார்களும், விமானமுமே பயன்படுத்த அப்போது தேவையாகும்.

விவசாயத்தில் ICT

விவசாயப் பகுதியில் ict ஆனது ஆராய்ச்சியாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், விரிவாக்கல் சேவைகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு விதமான விவசாய வலைவேலைகளுக்கு உள்ளேயும் அவைகள் மத்தியிலும் அறிவைப்பகிர்ந்து கொள்ள அனுசரணை செய்கிறது. ict ஆனது தகவல்களை வழிப்படுத்துவதிலும் உள்ளக உள்ளடக்கத்தை வழங்குவதிலும் கிராமிய விவசாய சமூகங்களை இணையத்துடன் இணைப்பதால் உயிர்ப்பான தகவல் பாய்ச்சலுக்கு வழிவகுக்கிறது.




விவசாயத்தில் ICT செயற்பாடுகள்




 விரிவாக்கல் நோக்கங்களுக்காக இணையம் மற்றும் e - தபாலின் பயன்பாடு


 விவசாய காலநிலைத் தகவல் தொடர்பாடல்


 சந்தை விலைத் தகவல் தொடர்பாடல்


 விவசாய ஆராய்ச்சியாளர்களின் வலைவேலைகளை அனுசரணையாக்கல்


 நிலப்பதிவேடுகளை அபிவிருத்தி செய்தல்.

சுகாதாரத்தில்

ict இன் அபிவிருத்தியின் காரணமாக சுகாதாரப் பகுதியும் பல்வேறு அம்சங்களில் அபிவிருத்தியடைந்துள்ளது. தேவையற்ற பிரயாணத்தைக் குறைத்து வீட்டிலிருந்தவாறே வைத்தியரோடு தொடர்புகொள்ளும் வசதியினால் நோயாளியின் வாழ்வை இலகுபடுத்தியிருக்கிறது. வைத்தியர்களுக்கு குணங்குறியறிதல் மற்றும் வைத்திய பரிசோதனை என்பன இலகுவானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளன. தேசிய சுகாதாரத்திட்டத்தின் நோக்கங்களை அடைய மூலோபாய தொடக்கங்களை நிலைநாட்டுவதால் வைத்தியசாலை மற்றும் ஆட்சிப்பகுதி சேவைகளைக் கணினிமயப்படுத்த ict ஆனது செய்ற்றிட்டங்களில் நிர்வாகங்களுடன் (வைத்தியசாலைகள், உள்ளக மற்றும் பிரதேச சுகாதார நிறுவனங்கள்) கூட்டிணைந்து செயற்படுகின்றது. வைத்தியக்கல்வியை அடிப்படையிலே மாற்றியிருக்கிறது. பெரிய வைத்தியசாலைகள் ict தொகுதிகளை, கணக்கு வழக்குகள், எண்ணியப்படுத்திய கதிர்படவியல், ஆய்வுகூட அனுப்பாணை (Orders), கிரமமாக்கல் மற்றும் அறிக்கைப்படுத்தும் தொகுதிகள், இலத்திரன்மய நோயாளர் பதிவுத் தொகுதிகள் போன்றனவற்றைச் செயற்படுத்த உபயோகிக்கலாம். இவைகள் யாவும் இப்போது வைத்தியசாலைகளின் செயற்பாட்டினோடு இணைந்த பகுதியாக மாறியிருக்கின்றன. எல்லா ஆய்வுகூடங்களும் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடியும். எண்ணிய கதிர்ப்படவியலானது கணினி உதவியுடனான Tomography (CAT) நுண்ணாய்வுடன் ஆரம்பித்தது. காந்தவியல் பரிவு நிழற்படமாக்கல் (Magnetic Resonance Imaging - MRI) என்பதும் பொது எண்ணிய நிழற்படமாக்கலும்
(Digital Imaging) பரந்த அளவில் பயன்படுகின்றன. அத்துடன் கதிர்ப்படவியலில் படலத்தின் அவசியம் தேவைப்படாதநிலை வந்துள்ளது. எண்ணிய நிழற்படுத்தல் மிகுந்தளவு அனுகூலங்களுடையது. நிழற்பட உருவங்கள் கிரமப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படலாம். அவைகள் விரைவாக வைத்தியசாலைக்குள் பல்வேறு தானங்களிலிருந்து பார்க்கப்படவும் கூடும். அல்லது தூர இடங்களிலிருந்தும்கூட அவதானிக்கப்பட இயலும். முன்பு எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் மாற்றப்படக்கூடியதாக இருந்திருக்கலாம். அத்துடன் தோல்விக்கான சாத்தியமும் அதிகமாக இருந்தது. ஆனால் புதிய கருவிகளின் உபயோகத்தினால் அவ்விதமான தன்மைகள் குறைந்துவிட்டன. ict ஆனது வைத்தியத்தில் தகவல்களை அடையும் வழியையும் மாற்றியுள்ளது. இருபது வருடங்களுக்கு பின்பு வைத்திய நூலகத்தில் ஒரு தலையங்கத்தில் உள்ள பிரசுரிக்கப்பட்ட பொருளைப்பற்றிய தகவலைப்பெற சில நாட்கள் தேவையாயிருந்தன. இப்போது சில நிமிடங்களில் ஒரு உடனிருக்கும் தரவுத்தளத்தின் வழியாக பலவருடங்களுக்கு முன்பாக ஆராய்ச்சி நிறைவு பெற்ற தகவல்களைப் பெற முடியும். HIV, புற்றுநோய் மற்றும் உடலுறுப்பு மாற்றம் செய்யும் மருந்து போன்ற உயிர்காக்கும் மருந்து வகைகளில் ஒரு புதிய புரட்சிகரமான தொகுதிகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) ஆனது பின்வரும் சமூகச்செயற்பாடுகளில்ஃதுறைகளில் பிரதான பங்களிப்பைச் செய்துள்ளது.

கற்பித்தலில்


தொலைதூர கூட்டுச் செயல்களுக்கு அனுகூலமான கணினி ஊடகம் சார்ந்த வலை வேலைகளினூடாக ஆசிரியர் தொழில் வாண்மை அபிவிருத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. தொழில்நுட்பத்தை உபயோகித்து வலிதாக்கி மனப்பாடம் செய்யும் அடிப்படையிலான கற்பித்தல் நடைமுறைகளை உடைத்தெறிந்து பெரும்பாலும் மாணவர் மையமாக்கப்பட்ட கற்றிலின்பால் கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ள ஆதாரமாயுள்ளது. வகுப்பறைகளில் கணினிகளை உபயோகித்து பிந்திய பாடப் புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் கோவைகளை உடன்வரும் வழிவகைகளினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்.


கற்றலில்


உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மாணவர்களுடன் கூட்டான செயற்பாடுகளை மாணவர்கள் முன்னேற்றமாக மேற்கொள்வதற்காக வலைவேலைகளை விருத்தி செய்தல். மாணவர்களுக்குக் கற்றல் உள்ளடக்கம் மற்றும் மூலவளங்களை வழங்குவதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் ஏதுவான வழக்கமாக ஒரு பெரிய அளவிலுள்ள (அந்த அளவீடு மிக விரைவாகக் குறைந்து கொண்டு வருகிறது.) ஒரு மென்பொருள் பொதியாக கற்றல் முகாமைத்துவத் தொகுதி (LMS) உள்ளது.


கல்வியியல் முகாமைத்துவத்தில்


கல்வி ஒழுங்கமைப்பின் நிர்வாகத்தை மேம்படுத்த கல்வி முகாமைத்துவத் தகவல் தொகுதிகள் அபிவிருத்தி செய்தல் (EMIS). கற்றல் முகாமைத்துவத் தொகுதிகள். வந்துகொண்டிருக்கும் உட்புகுத்தப்பட்ட அநேக பாடநெறிகள் அவற்றின் பரீட்சைகளையும் (Online இலேயே) நடத்துகின்றது.

Globalation (உலகமயமாக்குதல்)

உலகமயமாதல் மூலம் தொடர்பாடலானது அபிவிருத்தியடைந்துள்ளது. இப்பொழுது குறுகிய நேரத்தில் தகவல்களை அல்லது செய்திகளை உலகின் எப்பகுதியில் இருந்தும் அறிந்து கொள்வதற்கு நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கருவிகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. உலக மயமாக்கல் செயல்பாட்டின் மூலம் அகில உலகத்தையும் ஒரு ஆதிக் கிராமத்தின் அளவிற்கு சுருங்கச் செய்வது எனலாம். அதாவது தகவலின் ஊடாக அகில உலகமும் இணைக்கப்படுகின்றது எனப் பொருள்படும். தகவலைப் பொறுத்த மட்டில் முழு உலகமும் ஒரு உலக கிராமமாக வந்துள்ளது.


அரச துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்ளைகளை இலங்கையில் நெறிப்படுத்தும் நிறுவனம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (Information Communication Technology Agency- ICTA) ஆகும்.


தொழில்நுட்பங்கள் பொதுவாக பின்வரும் வடிவங்களில் சமூகத்தின் பாவனையில் உள்ளன.


 தனிநபர் கணினிகள்

 செல்லிடத் தொலைபேசிகள்

 இணையம்

 வைத்திய நுண்ணாய்வுக் கருவிகள்

 செயற்கைக் கோள்கள்

 லேசர்கள்

 ஒலி ஒளி நுட்பக்கருவிகள் (CD, DVD, Blu ray etc.)

 தொலைக்காட்சி

 தன்னியக்க வாகன மின்னணுவியல்

 ATM வசதிகள்

 கடன் அட்டைகள்

Sunday, October 16, 2011

Cloud Computing

இம்முறையின் மூலம் ஒரே நேரத்தில் எவ்வளவு பேர் வேணுமானாலும் எங்கும் தொடர்பு கொண்டு பேச முடியும். தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும், கணினியில் சேமித்து வைக்கவும் முடியும். ஆனால் இது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு மாத்திரமே சாத்தியமாகும்.

Vidu Suva

இத்திட்டம் ICTA நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலங்கையில் கிராமிய மக்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் 1வது வைத்திய சேவைத் திட்டம். இது மத்திய வைத்திய நிலையத்தையம் அதனைச் சூழவுள்ள ஏனைய கிராமப்புற வைத்திய நிலையங்களுடன் இணையச்செய்து மத்திய நிலையத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளை கிராமப்புற மக்களுக்கு துரித கதியில் பெற்றுக் கொள்வதற்கான தரவுகளை பரவலாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

UN ESCAP (ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு)

இக் குழவின் நோக்கம் அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் தொடர்பான கொள்கையாக்கங்களில் தகவல் தொடர்பாடல் உத்தி முறைகளை உள்வாங்கி கொள்ளல், பிராந்திய அடிப்படையில் கணினி விண்ணப்பங்களை பயன்படுத்தல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மனித வளத்தை கட்டியெழுப்பல், அனர்த்த முகாமைத்துவம் போன்றவற்றில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படத்தல் என்பவற்றில் கூட்டாக செயற்படுதல் ஆகும்.

DigitalTalkingBook

இது இலங்கையரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அச்சுவடிவில் உள்ள புத்தகங்களை ஒலி வடிவில் செவிமடுக்க உதவுகின்றது. மும்மொழிகளிலும் இதன் பயனை பெற்றுக் கொள்ளலாம். இது கண் பார்வை அற்றவர்கள் அச்சு வடிவிலுள்ள புத்தகங்களை வாசிக்க உதவுகின்றது. இத்திட்டத்திற்கு 'மந்தன் விருது' வழங்கப்பட்டுள்ளது.

1.அரசாங்கத் தகவல் நிலையம் (Government Information Centre):

அரச சேவை பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள ICTA தரும் திட்டம் 'நாட்டின் நுழைவாயில்'. அரசாங்க நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படும் சேவைகள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கமிக்கும் நிறுவனமே இதுவாகும். இங்கு மும்மொழிகளிலும் தகவலை பெற்றுக் கொள்ளமுடியும். பொது மக்கள் தகவல்களை பெற்றுக் கொள்ள 1919 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக பயன்படுத்த முடியும். இத்திட்டத்திற்கு அண்மையில் உலகத் தரம் வாய்ந்த "World Submit" விருது கிடைத்தது

e-சமூக அபிவிருத்தி உருவாக்கல் (e-Society Development Initiative)

e-SDI ஆனது ICTA நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. e-சேவைகள், e-கற்கைநெறிகள், புதிய தொழில் நுட்ப முறைகளைக் கையாளல், வறிய மக்களின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்தல், வலது குறைந்தோர் மற்றும் முதியோர்களுக்கிடையே தகவல் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்தல் போன்றன முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

ஈ - அரசாங்கம் (e-Governance & e-Government)

ஈ - அரசாங்கம் (e-Governance & e-Government) e-Governance தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் பின்வருவனவற்றின் பொருட்டு சிறப்பாக பயன்படுத்தப்படுகின்றது.


 அரசாங்க செயல்முறைகளின் திறமையை வகை கூறும் பொறுப்பை வெளிப்பாட்டுத் தன்மையை மேம்படுத்தல்.


 அரசாங்கங்களின் தீர்மானம் எடுத்தல், செயல்முறைகளில் நாட்டுப் பிரஜைகள் பங்கு கொள்வதற்கான சக்தியை வழங்கும் ஒரு கருவியாக பயன்படுத்தல்.


e-Government ஆனது அரசாங்க தகவல்களையும் சேவைகளையும் இணையத்தின் மூலம் 24 மணித்தியாலமும் மக்கள் பெறக்கூடியதாகவும் சிக்கனத்துடன் வழங்குவதற்கு பயன் படுத்தப்படுகின்றது. சிறப்பாக கிராமப்புற மக்களும் சேவை நிலையங்களுக்கு விரைவாகப் பயணிக்க முடியாதவர்களும் சேவைகளைப் பற்றிய தகவல்களை விரைவாக அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் அரசாங்க சேவைகளை வினைத்திறனுடனும் பயன்மிக்கதாகவும் வழங்க முடியும். உதாரணமாக அரசாங்க பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது, Credit Card மூலம் Telephone Bill போன்ற Payments ஐயும் செலுத்த முடியும் .

இலங்கையில் தகவல் தொடர்பாடல் அபிவிருத்தித் திட்டங்கள்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதற்கான பல வகையான திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.


e-Srilanka Programe (e-இலங்கை வேலைத்திட்டம்)

தகவல் தொழில்நுட்பத்தை கிராமிய மாணவர்களிடம் மாத்திரம் அன்றி நகர மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதில் e-sri lanka திட்டம் முக்கிய பங்கை ஆற்றுகின்றது. இலங்கையில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல், வறுமையை ஒழித்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு e-Sri lanka Programme செயற்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம்

 நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
 வறுமையைக் குறைத்தல் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல்
 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு கொண்ட மூளைசாலிகளை உருவாக்குதல்
 அரச சேவைகளையும் ஏனைய சேவைகளையும் நவீன மயப்படுத்தல்.
 சமூக மேம்படுத்தல்
 வாய்ப்புக்களையும், அறிவையும், நியாயபூர்வமாக வழங்கப்படுவதை நிச்சயப்படுத்தல்.போன்ற செயற்திட்டங்களைச் செயற்படுத்த முயன்று கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது.

e – சமூகம் (e- Society) e-சமூகத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், இலங்கையின் வறிய மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

e-சமூக நிகழ்ச்சித் திட்டத்தில் அடங்கும் மூன்று பிரதான துறைகள்: e-சமூக அபிவிருத்தியின் முன்னெடுப்பு, e-கிராமம், ict ஊடான கூட்டு சமூக பொறுப்புக்கள் என்பனவாகும்.

e– கிராமம் (e-Village)

கிராமிய சமுதாய மக்களின் வாழ்க்கையின் குறிப்பாக இளைஞர் வாழ்க்கையின் வளர்ச்சி, தரச் சிறப்பு ஆகியவற்றிற்கு ict இனை கருவியாகப் பயன்படுத்துவதன் மூலமும் அதிக வாய்ப்புக்களை வழங்குதல் e-கிராமத்தின் நோக்கமாகும். e-கிராமத்தின் கீழ் மாதிரித் திட்டம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள சிறிய கிராமமான மகாவிலாச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களும் இளைஞர்களுக்கு ஒரு சில வாய்ப்புக்களும் உள்ள இந்தக் கிராமம் ict அறிமுகஞ் செய்யப்பட்டபோது பெரிய அளவில் நன்மையடைந்தது. அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள ஆசிரியர்கள், தனிநபர்கள் தோற்றம் பெறுவதில் இத்திட்டம் தெளிவான தாக்கத்தைச் செலுத்தியது. இந்த வெற்றிகரமான மாதிரியை ICTA நாடு பூராகவும் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் விஸ்த்தரிப்பதற்கு விரும்புகிறது. சிறுவர்கள், முதியோர்களுக்கு தகவல், அறிவு என்பவற்றுக்கான வழிகாட்டுதல், ஆற்றல் மிக்க சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல் என்பன இத்திட்டத்தின் சில இலக்குகளாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் கிராமிய மக்களை வலுப்படுத்தும் வழிவகைகளை இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இப்போது பரந்தளவில் ஆராய்ந்து வருகின்றது.


e – ஆசியா (e-ASIA)

இவ்வாண்டு டிசம்பர் மாதம் e-ASIA சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்றது. இது e-ASIA மாநாட்டுத் தொடரின் நான்காவது கட்டமாகும். இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்(ICTA) இதனை ஏற்பாடு செய்து வருகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்திக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை இலக்காகக் கொண்டே இம் மாநாடு இடம்பெறுகின்றது. ஈ-அரசாங்கம் (e-Government), டிஜிட்டல் கற்கை, ஈ-சுகாதாரம் மற்றும் தொலைநிலையங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டு இம் மாநாட்டின் அமர்வுகள் ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளன. அறிவார்ந்த சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த அடிப்படையில் அறிவார்ந்த சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் மாத்திரமே சாத்தியப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே அண்மையில் 2009ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில மொழி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. காத்திரமான மனிதவளம் ஒன்றை உருவாக்கி உறுதியான பொருளாதாரச் சந்தை ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு இது பெரிதளவில் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ict) சமூகமும்

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ict) சமூகமும் தகவல் ஆக்கத்திற்கும் பராமரிப்பிற்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் தொடர்பூட்டுவதற்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வசதி அளிக்கின்றது. அத்தோடு உடனுக்குடன் பதிலீடுகளைப் பெற்றுக் கொள்ளவும் பல்வகையான முறையில் தகவல்களை உருவாக்கவும், தகவல்களை அறிக்கை செய்யவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உதவுகின்றது. அத்தகைய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பண்பியல்புகளின் மூலம் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்படுகின்ற சேவையின் தரத்தை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் பயன்படுத்த முடியும். அத்துடன் மக்களின் நாளாந்த தேவைகளுக்கு உதவுவதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உதவுகின்றது. ஆகவே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது சமூக பொருளாதார மாற்றங்களை விரைவாகவும், பயன்பாட்டுடனும், திறமையுடனும் முன்னெடுத்துச் செல்வதற்கான மிகச் சிறந்த கருவியாகும்.