இலத்திரனியல் கெடுபொருளான கிருமிகள், மற்றும் Trojan horse, பிரயோகங்கள் ஆகியன வைரஸ்களாகும் என்ற பொதுவான ஒரு தவறான எண்ணம் உள்ளது. அவைகள் அப்படியல்ல. கிருமிகள், Trojan horse மற்றும் வைரஸ்கள் என்பன ஒரு அகன்ற பிரிவுப் பகுப்பாய்வாளரால் 'தீயநோக்கமுள்ள இரகசியக் குறியீடுகள்' எனக் கூறப்படுகின்றன. உதாரணம்:
வைரஸ்
வர்மிஸ்
றொஜன் ஹோர்ஸ்
வைரஸ் உங்களுக்குத் தெரியாமலும் உங்களது விருப்பங்களுக்கு எதிராகவும் உங்கள் கணினியில் ஏற்றப்பட்டுச் செயற்படும் ஒரு நிகழ்ச்சிநிரல் அல்லது இரகசியக் குறியீட்டின் ஒரு பகுதியே இதுவாகும். ஏனைய நிகழ்ச்சிநிரல் போன்றே இதுவும் கணினி என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்களைக் கொண்டுள்ளது.
வைரஸ்கள் தாமாகவே பல்கிப் பெருகக்கூடியன.
எல்லா கணினி வைரஸ்களும் மனிதராலேயே ஆக்கப்பட்டன.
ஒரு எளிய வைரஸ் மீண்டும் மீண்டும் பிரதியாக்கம்செய்து இலகுவாக உருவாகத்தக்கது.
No comments:
Post a Comment