திருட்டு என்பது என்ன?
திருட்டு என்பது நிகழ்ச்சிநிரல்களைச் சட்டத்திற்கு மாறாகப் பிரதியெடுத்தல், மோசடி செய்தல் மற்றும் மென்பொருளைப் பகிர்தல். அத்துடன் ஒரு நண்பருடனாவது நிகழ்ச்சி நிரலொன்றைப் பகிர்தல் என வரையறுக்கப்படும். மற்றொரு வகையில் திருட்டு என்பது ஒரு உரிமம் எதுவுமின்றி மென்பொருளை உருவாக்கல், பகிர்தல் அல்லது பயன்படுத்தல் எனவும் கூறலாம். கணினிக் திருட்டானது எண்ணக உருவமைப்புடைய ஏதாவதொன்றை உள்ளடக்கியிருக்கும். அதாவது ஏதாவது மென்பொருள், வீடியோ, விளையாட்டு, எண்ணக செவிப்புலச் சாதனம் அல்லது ஈ-புத்தகம் போன்றன.
மென்பொருள் திருட்டு எனப்படுவது என்ன?
கணினி மென்பொருளானது USA இன் கூட்டரசு பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ்ப் பாதுகாக்கப்படுகின்றது. அது கூறுவதாவது பதிப்புரிமை வைத்திருப்பவரின் அனுமதியின்றி ஆவணக்களரிப் பின்னுயர்த்தலை (Archival back-up) ஐத் தவிர வேறு ஏதாவது காரணத்திற்காகவும் பயனாளிகள் ஒரு மென்பொருள் பாகத்தைப் பிரதி செய்யக்கூடாது. கணினி நிகழ்ச்சிநிரலின் அதிகாரமற்ற மீள் உற்பத்தியானது திருட்டு என்றே கருதப்படும். கணினித் திருட்டானது பதியப்பட்ட ஊடகங்களான வீடியோ நாடாக்கள் மற்றும் சுருக்கமாக்கிய தட்டுக்கள் (இறுவட்டுக்கள் - - compact discs) போன்றவற்றிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் பிரதியாக்கத்தின் தரம் இங்கு குறைந்துபோவதில்லை. இறுதிப்பயனாளியை வலுவூட்டி ஒரு உற்பத்தித் துணையாளராய் உருவாக்கும் தொழிற்றுறையானது கணினித் தொழிற்றுறை மட்டுமேயாகும். கணினிப் பாவனையாளரின் கைகளில் நம்பிக்கையும் பொறுப்புணர்ச்சியும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு கணினி நிகழ்ச்சிநிரல் மீண்டும் மீண்டும் பிரதியாக்கம் செய்யப்பட்டாலும் ஆரம்ப நிரல் போனறே செயற்படும். பல வருடங்கள் எடுத்து விருத்தி செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலை ஒரு சில செக்கன்களில் பிரதியாக்கம் செய்துவிட முடியும்.
மென்பொருள் விருத்தியாக்குவது செலவு அதிகமுள்ளதாக இருப்பினும் அநேகமாக எல்லா தனி நபர் கணினியை உபயோகித்து ஒரு விலை மலிவான பிரதியை உருவாக்கிக் கொள்ள முடியும். தனிநபர் கணினிகளின் பாவனை பல பயனாளிகளைத் திருடர்களாக ஆக்கிவிட்டன எனக் கூறமுடியும். தமது வன்தட்டுக்களில் உள்ள எல்லா மென்பொருள்களும் அவர்களால் வாங்கப்பட்டன என்று நேர்மையாக எத்தனை பேரால் கூற முடியும்? பதிப்புரிமை வடிவமைப்புக்கள் மற்றும் தனி உரிமைகள் சட்டம் 1989 இலிருந்து நீங்கள் காண முடிவது என்னவெனில் மென்பொருளைக் களவாடுவது அல்லது பிரதியாக்கம் செய்வது குற்றவாளிக்கான ஒரு குற்றமாகும். எவ்வாறெனினும் பல வேறுவேறு பிரயோகங்களுக்கு என பல இலவசமான திறந்தவள மென்பொருட்கள் (Open softwares) கிடைக்கின்றன.
No comments:
Post a Comment